சிறப்பு பயிற்சி வகுப்புகள்

அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மீத்திறன் (கல்வியில் பின்தங்கிய) மாணவர்கள் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைக்கும் வகையில் விடுமுறை தினங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மாதந்தோறும் நமது கல்விப் பேரவையில் அளிக்கப்பட்டு வருகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

இணையதள மையம்

இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதன் மூலம் பலர் வேலைவாய்ப்பு பெற ஏதுவாகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் இணைய சேவை மையங்கள், இணைய விளையாட்டு மையங்கள் போன்றவை இதில் அடங்கும்.

விரைவான தகவல் பரிமாற்றத்தில் மின்னஞ்சல் மிகப்பெரும் பங்காற்றுகிறது. முக்கியமான கோப்புகளைப் பரிமாறிக் கொள்ள வகை செய்கிறது. புகைப்படங்கள், காணொளிகள் போன்றவை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.

வேலைதேடும் இளைஞர்களுக்கு தன் விவரக் குறிப்பை தயார் செய்வதென்பது மிக முக்கியமானதாகும். அதற்கு உதவும் பல வலைத்தளங்கள் இணையத்தில் உள்ளன. பொருத்தமான வார்த்தைகளைக் கொண்டு தன்விவரக் குறிப்பைத் தயார் செய்ய அவை பெரிதும் உதவுகின்றன. முகநூல் வாயிலாகவும் தன்விவரக்குறிப்பினைப் பகிர்ந்து பயனடைவோர் பலர்.

இணயத்தில் உள்ள அனைத்து சேவைகளையும் குறைவான கட்டணத்தில் நமது கல்விப் பேரவையில் அமைந்துள்ள இணையதள மையத்தில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்...
 

வட்டியில்லா கடன்

இன்றைய உலகில் பொருளாதாரம் என்றாலே அது வட்டியுடன் இணைந்தது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தைச் சீரழித்து மனித வாழ்கையின் அமைதிக்கு ஊரு விளைவிக்கும் இந்த வட்டி, அல்லாஹ்வாலும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களாலும் ஹராமாக்கப்பட்ட சபிக்கப்பட்ட ஒன்றாகும்.

இத்தகைய கொடிய வட்டியைப்பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வதோடு மட்டும் நின்றுகொள்ளாமல், அதிலிருந்து பாதுகாப்பதற்காக ஒரு செயல் ரீதியான திட்டம் தேவை என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்டு 2014 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தத்திட்டம்.

நமது அழகிய கடன் திட்டத்தின் கீழ் ரூ. 10,000/- வரை வட்டியில்லா கடனாக அதிகபட்சம் 6 மாதங்கள் தவணையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பலர் பயனடைந்து உள்ளனர். மேலும், தனி நபர் தங்களது நண்பர்கள்,உறவினர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கடனுதவி செய்யவிரும்பினால், அவர்கள் நமது ரஹ்மத் அறக்கட்டளையை அல்லது கல்விப் பேரவையை அணுகலாம், அவர்களது கடன் தொகைக்கான பாதுகாப்பை அறக்கட்டளை உறுதி செய்யும்.
 

நூலகம்

கற்கும் கல்வியின் மீது, கல்வி கற்றுக்கொள்ளும் மாணவன் பேராவல் கொள்ள வேண்டும். இதை ஏற்படுத்துவது தான் ஆசிரியரின் பணியாக இருக்க முடியும்.படிப்பின் மீது மாணவனுக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடுபவரே உண்மையில் நல்லாசிரியர் ஆவார்.

நாட்டு நடப்புகள், உலக நடப்புகள் போன்ற அன்றாடச் செய்திகளை மாணவர்கள் வாசித்தறிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் விதமாக. நடப்பு வரலாறு, உள்ளூர் வரலாறு, நாட்டு வரலாறு, உலக வரலாறு என அனைத்து நூல்களும் இங்கே காணக் கிடைக்கும்.

வெறும் மனப்பாடம் செய்வோராக மாணவரையும் மனப்பாடத்தைக் கேட்டு மதிப்பெண் வழங்குபவராக ஆசிரியரையும் வைத்திருப்பதால் சமூகம் எந்த நன்மையும் பெறப்போவதில்லை.

இந்த நிலைமையை மாற்றியமைக்க கூடிய ஆற்றல் பெற்றவை நூலகங்கள் தாம்!

இவற்றை சிறப்பாக உருவாக்கி நடைமுறைப் துவதே நமது நோக்கம்..
 

இலவச சேவைகள்

1)ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு டியூஷன்
2)அரபிக் மற்றும் ஹிந்தி வகுப்புகள்
3)ஸ்போக்கன் வகுப்புகள்
4)அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி
5)ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகம்
6)கோடைகால பயிற்சி வகுப்புகள்
 

சமூக சேவைகள்

1)ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி கல்லூரி கடனுதவி
2)மருத்துவ உதவிகள்
3)கடன் உதவிகள்
4)பொது நல சேவைகள் (அரசு பணிகள்)
 

நகலகம் & E-சேவை மையம்

1.சான்றிதழ் பெற
2.E-டிக்கெட் முன்பதிவு
3.E-Payments
4.கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவை
5.தட்டச்சு சேவை
6.நகல் எடுத்தல்
7.புகைப்படம் எடுத்தல்
8.அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் பெற
9.அரசு நலத் திட்ட படிவங்கள் பெற