தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டின் சிறப்பியல்பாகத் தொலைநிலைக் கல்வி இயக்ககம் ஆகஸ்ட் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது

     தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககம் வாயிலாக நடத்தப்பெறும் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும், புதுதில்லியிலுள்ள தொலைநிலைக் கல்விக் குழுமத்திடம் (DEC) உரிய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

     கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் ஒரே நேரத்தில் பிறிதொரு பட்டம் (Degree), பட்டயம் (Diploma), சான்றிதழ் (Certificate) வகுப்புகளில் படிக்கும் வாய்ப்பும் உள்ளது

குறிக்கோள்கள்

      உயர்தரக் கல்வியை உலகிற்குப் பகிர்ந்து அளித்தல்.

     தமிழ் மரபு சார்ந்த கலை அறிவியல் தொழில் நுட்பங்களைத் தலைமுறைகள் பயன்கொள்ள வழிவகை செய்தல்.

     வாய்ப்பு வளம் அமையப் பெறாத சமுதாயத்தினை நோக்கிச் செனறு கல்வி கற்கும் வாய்ப்பினை அமைத்துத் தருதல்.

     மண் வளம் மரபு வளக் கல்வி செயல்முறை அறிவுகளால் காக்கப் படுவதற்கு வழி காணுதல்.

     தமிழர் தம் மரபு வழி சார்ந்த அறிவியல் தொழில் நுட்பம் மொழி இலக்கணம் வரலாறு போன்ற நிலைப் பாடுகளின் செவ்வியில் பணபுகளை உலகறியச் செய்தல்.

     தமிழால் முடியும் தமிழனால் முடியும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எவ்வகை அறிவுத் துறையிலும் விளக்கம் பெற முடியும் என நிறுவுதல் போன்றவை தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் முதன்மைக் குறிக்கோள்களாகும்.

மாற்றுத்திறனோருக்கான கட்டணச் சலுகை (Fee Concession)

     மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில், பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், மற்ற கட்டணங்களான சேர்க்கைக் கட்டணம், பதிவுக் கட்டணம், தகுதிக் கட்டணம், சிறப்புக் கட்டணம், அஞ்சல் செலவுக் கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் யாவற்றையும் செலுத்துதல் வேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் வழி கல்வி உதவித் தொகை

     அரசு விதிகளின்படி இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உழவர் பாதுகாப்பு கல்வி உதவித் தொகை பெற்றுத் தரப்படுகிறது. மாணவர்கள் உழவர் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, பல்கலைக்கழக அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் விண்ணப்பம் அளித்து தொலை நிலைக்கல்வி இயக்கக இயக்குநரின் பரிந்துரையின் அடிப்படையில் மாணவர்களே கல்வி உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம்.

தாழ்த்தப்பட்டோருக்கான உதவித் தொகை (Scholarship for SC/ST students)

     இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்படிப்பு பயிலும் தாழ்த்தப்பட்டோருக்கான (SC/ST) கல்வி உதவித் தொகை அரசு விதிகளின்படி பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்று அளிக்கப்படும். மாணவர்களே உரிய துறையிலிருந்து விண்ணப்பம் பெற்று அதனை முழுமித்துக் குறியிட்டுத் தாளில் கையொப்பமிட்டு அத்துடன் வட்டாட்சியரிடமிருந்து வருமானச் சான்று மற்றும் வேலையின்மைக்கான சான்று பெற்று அசல் சான்றுடன் இயக்கக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முதுநிலைப் பட்டம் (ஈராண்டுகள்) [Post Graduate]


  பட்டம் தகுதி
1. எம்.ஏ. (தமிழ்) தமிழை ஒரு பாடப்பிரிவாகக் கொண்ட இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி
- அல்லது -
நாடகவியல், தொல்பொருள் ஆய்வு ஆகிய தாள்களுடன் மூன்றாண்டு புலவர் பட்டயப் படிப்புத் தேர்ச்சி
- அல்லது -
அதற்கு இணையானது
2. எம்.ஏ. (வரலாறு) ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்
3. எம்.ஏ. (தமிழிசை) இசையில் இளநிலைப்பட்டத் தேர்ச்சி
- அல்லது -
1) ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டத்துடன் கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிப் பெற்றிறுத்தல் வேண்டும்.
தமிழக அரசின் சங்கீத வித்வான் அல்லது இசைக்கலைமணித் தேர்வு
2) தமிழக அரசு தேர்வு இயக்கத்தின் மேனிலைத் தேர்வு
3) பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஏழிசை மணித் தேர்வு ஈராண்டுகள்
4) தமிழ்நாடு மாவட்ட அரசு இசைப்பள்ளித் தேர்வு
5) இசை ஆசிரியப் பயிற்சி பட்டயத் தேர்வு
4. எம்.பி.ஏ.  
5. எம்.எஸ்சி. (கணிதம்) இளநிலை கணிதம் / புள்ளியியல் / பயன்பாட்டுக் கணிதம் தேர்ச்சி
6. எம்.எஸ்சி. (புவியியல்) ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்
7. எம்.எஸ்சி. (உளவியல்) ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்
8. எம்.ஏ. (ஆங்கிலம்) ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்
9. எம்.ஏ.
(யோகாவும் மனித மாண்பும்)
ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்
(ஆழியாறு உலக சமுதாய சேவா சங்கத்துடன் இணைந்து நடத்தபடுகிறது)
10. எம்.எஸ்சி.
(சுற்றுச்சூழல் அறிவியல்)
ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்
11. முதுநிலை சமூகப் பணி (M.S.W.) ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்
12. நூலகம் மற்றும் தகவலறிவியல் ( M.Li.Sc .) (ஓராண்டு) இளநிலை நூலகம் மற்றும் தகவலறிவியல் பட்டத் தேர்ச்சி
13. முதுநிலை வணிகவியல் இளநிலை வணிகவியல் பட்டத் தேர்ச்சி


முதுநிலைப் பட்டயம் (ஓராண்டு) [PG Diploma]


  பட்டம் தகுதி
1. பி.ஜி.டி.சி.ஏ. ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்
2. பி.ஜி.டி.ஜி.சி.
(வழிகாட்டல் மற்றும்
அறிவுரை பகர்தல்)
ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்
3. இணைய சேவை (Web Services) ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்
4. அசைவூட்டம் (Animation)  # ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்
5. காட்சி ஊடகவியல்
(Visual Comunication)  #
ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்

# சென்னை - Softview நிறுவனத்தாருடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இப்பாடப்பிரிவுகள் செயற்படுத்தப்படுகின்றன.சான்றிதழ் (6 மாதங்கள்) [Certificate]


பட்டம் தகுதி
1.  தமிழ்ப் புலவர் பயிற்சி தமிழ் இலக்கியத்தில் புலவர் பட்டம் அல்லது பி.லிட். பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது நாடகவியல், தொல்பொருள் ஆய்வு ஆகிய தாள்களுடன் மூன்றாண்டு புலவர் பட்டயப் படிப்புத் தேர்ச்சி.
இப்பாடப்பிரிவின் காலத்தில் 10 நாட்கள் கட்டாயத் தொடர்பு வகுப்பில் (Compulsory Contact Class) பங்குபெறுதல் வேண்டும்.
2.  கணினி அச்சுக்கோப்பு  # +2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையானது
3.  தமிழ்க் கணினித் தொழில் நுட்பம்  # +2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையானது

 
4.  இசை
5.  பரத நாட்டியம்
6.  நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
7.  தொடுசிகிச்சை அறிவியல்  (ஓராண்டு)
8.  கருவி இசை (மிருதங்கம், தவில்)
9.  சுய உதவிக் குழு மேலாண்மை
10.  வள்ளலார் சிந்தனைகள்
11.  கோயிற் கட்டடக்கலை
12.  தமிழ் மொழி 
13.  அயல்நாட்டுத் தமிழர்களுக்கான இலக்கியம்
பத்தாம் வகுப்புத் தேர்ச்சி
அல்லது
அதற்கு இணையானது

# சென்னை - Softview நிறுவனத்தாருடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இப்பாடப்பிரிவுகள் செயற்படுத்தப்படுகின்றன.அறிமுக / தொடக்க நிலைப் படிப்புகள்


  பட்டம் தகுதி
1. அடிப்படை நிலைப் படிப்பு
(Foundation Course) 2-year
10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொடக்க நிலைப் படிப்பு (Pre Foundation Course) தேர்ச்சி
2. தொடக்க நிலைப் படிப்பு
(Pre Foundation Course) 1-year
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
3. அறிமுக நிலைப் படிப்பு 13 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


இளநிலைப் பட்டம் (மூன்று ஆண்டுகள்) [Under Graduate]


பட்டம் தகுதி
1.  பி.ஏ. (தமிழ்)
2.  பி.ஏ. (வரலாறு)
3.  பி.ஏ. (தமிழிசை)
4.  பி.பி.ஏ.
5.  பி.சி.ஏ.

மேல்நிலைப் பள்ளி (+2) தேர்ச்சி
அல்லது
10+ தொழில்நுட்பப் பட்டயம்
அல்லது
+2க்கு சமமான படிப்புத் தேர்ச்சி
அல்லது
10க்கு பிறகு 2 ஆண்டு ஐ.டி.ஐ. தேர்ச்சி
அல்லது
அதற்கு இணையானது


6.  பி.எஸ்சி. (கணிதம்)
மேல்நிலைப் பள்ளி (+2) தேர்ச்சி
[கணிதம் / வணிகக் கணிதம் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்]


7.  பி.எஸ்சி.
    (தொடு சிகிச்சை அறிவியல்

மேல்நிலைப் பள்ளி (+2) தேர்ச்சி
அல்லது
அதற்கு இணையானது 


8.  பி.ஏ. (ஆங்கிலம்)
9.  பி.எஸ்சி. (புவியியல்)
10.  பி.எஸ்சி. (உளவியல்)
11.  இளநிலை வணிகவியல்

மேல்நிலைப் பள்ளி (+2) தேர்ச்சி
அல்லது
அதற்கு இணையானது


12.  நூலக மற்றும் தகவலறிவியல்
     ( B.Li.Sc .)  (ஓராண்டு)
10+2+3 என்ற நிலையில் படித்து ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்


இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை [Under Graduate]


  பட்டம் தகுதி
1. பி.சி.ஏ.
(ஈராண்டுகள்)
கணிப்பொறித் தொழில்நுட்பவியல் (Computer Technology) அல்லது கணிப்பொறியியல் (Computer Engineering) அல்லது தகவல் தொழில் நுட்பவியல் (Information Technology) ஆகிய ஏதாவது ஒன்றில் தொழில் நுட்பக் கல்விப் பட்டயம்.
2. பி.எஸ்சி.
(தொடு சிகிச்சை அறிவியல்)
தொடு சிகிச்சை அறிவியலில்
பட்டயம் தேர்ச்சி


பட்டயம் (ஈராண்டுகள்) [Diploma]


  பட்டம் தகுதி
1. உணவு மற்றும் உணவக மேலாண்மை பத்தாம் வகுப்பு


பட்டயம் (ஓராண்டு) [Diploma]


  பட்டம் தகுதி
1. இசை ஆசிரியர் பயிற்சி மேல்நிலைப் பள்ளி (+2) தேர்ச்சியுடன் இசையில் சான்றிதழ்த் தேர்ச்சி / தமிழக அரசு இசைப் பள்ளிச் சான்றிதழ்
2. பரதநாட்டிய ஆசிரியர் பயிற்சி மேல்நிலைப் பள்ளி (+2) தேர்ச்சியுடன் பரதநாட்டியத்தில் சான்றிதழ்த் தேர்ச்சி
3. யோகா ஆசிரியர் பயிற்சி மேல்நிலைப் பள்ளி (+2) தேர்ச்சியுடன் யோகா சான்றிதழ்த் தேர்ச்சி
4. பரதநாட்டியம் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி
5. மூலிகை அறிவியல் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி
6. மருத்துவ மூலிகை அழகுக்கலை பத்தாம் வகுப்புத் தேர்ச்சி
7. மணியியல் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி
8. சோதிடவியல் +2 தேர்ச்சி
(அல்லது) அதற்கு இணையானது
9. கோயில் அர்ச்சகர் பயிற்சி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி 
(அல்லது) அதற்கு இணையானது
10. பேச்சுக் கலை +2 தேர்ச்சி
(அல்லது) அதற்கு இணையானது
11. அசைவூட்டம்  # +2 தேர்ச்சி
(அல்லது) அதற்கு இணையானது
12. காட்சி ஊடகவியல்  # +2 தேர்ச்சி
(அல்லது) அதற்கு இணையானது
13. இதழியல் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பு  # +2 தேர்ச்சி
(அல்லது) அதற்கு இணையானது
14. இசை (குரல்) 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதேனுமொரு அரசு நிறுவனத்தின் இசைக் கருவிச் சான்றிதழ் தேர்ச்சி.
15. கருவி இசை (வீணை, வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம்) 10ஆம் வகுப்புத் தேர்ச்சியுடன் ஏதேனுமொரு அரசு நிறுவனத்தின் குரலிசையில் இசைச் சான்றிதழ் தேர்ச்சி.
16. கருவி இசை (மிருதங்கம், தவில்) 10ஆம் வகுப்புத் தேர்ச்சியுடன் தாளக்கலை நுட்பவியல் சான்றிதழ்த் தேர்ச்சி (அல்லது) 10ஆம் வகுப்புத் தேர்ச்சியுடன் ஏதேனுமொரு அரசு நிறுவனத்தின் தோற்கருவிச் சான்றிதழ்த் தேர்ச்சி
17. மலையாளம் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
18. தெலுங்கு பத்தாம் வகுப்புத் தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
19. கன்னடம் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
20. தொடுசிகிச்சை அறிவியல்  மாதம் இரண்டு வகுப்புகள் (சனி, ஞாயிறு)
கம்பம் அகாடமி ஆஃப் அக்குபஞ்சர், கம்பம், நிறுவனத்தாருடன் இணைந்து நடத்தப்படுவது
+2 தேர்ச்சி 
(அல்லது) அதற்கு இணையானது
21. கல்வெட்டியல் +2 தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
22. நாணயவியல் +2 தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
23. கோயிற் கட்டடக்கலை +2 தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
24. சுவடியியல் +2 தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
25. வள்ளலார் சிந்தனைகள் +2 தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
26. சுயமுன்னேற்றமும் இராஜவர்ம யோகமும் +2 தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
27. சுய உதவிக் குழு மேலாண்மை +2 தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
28. தமிழ் மொழி +2 தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
29. அயல் நாட்டுத் தமிழர்களுகக்கான இலக்கியம் +2 தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையானது
30. மரபுவழித் தமிழ் மருத்துவம் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி

# (9 மாதங்கள்) சென்னை - Softview நிறுவனத்தாருடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இப்பாடப்பிரிவுகள் செயற்படுத்தப்படுகின்றன.